செய்திகள்
மாநகர போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பு பலகை.

பாலம் கட்டும் பணி நடப்பதால் கோயம்பேடு பஸ்நிலையத்துக்குள் கிண்டி-தாம்பரம் பஸ்கள் செல்லாது

Published On 2018-01-21 07:47 GMT   |   Update On 2018-01-21 07:47 GMT
கோயம்பேடு 100 அடி சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவதால் கிண்டி- தாம்பரம் வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு முன்பு 100 அடி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.

தற்போது பஸ்நிலைய வாசல் சிக்னல் அருகே பில்லர் அமைக்கும் பணி நடைபெறுவதால் அம்பத்தூர், செங்குன்றம், பூந்தமல்லி பகுதிகளில் இருந்து வடபழனி மார்க்கமாக கிண்டி, தாம்பரம், வேளச்சேரி நோக்கி செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்குள் செல்லாமல் வெளியில் நிறுத்தப்படுகிறது.

அங்குள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இந்த மாற்றம் நேற்று மதியம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வடபழனி பகுதியில் இருந்து அண்ணாநகர், செங்குன்றம் நோக்கி செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் வழக்கம்போல் சென்று வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இதுபற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கோயம்பேடு பஸ்நிலையம் முன்பு பில்லர் அமைக்கும் பணி முடியும் வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்றார். #Tamilnews
Tags:    

Similar News