செய்திகள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் ஊர்வலம்

Published On 2017-12-11 04:58 GMT   |   Update On 2017-12-11 04:59 GMT
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தங்கச்சிமடத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து மீனவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

ராமேசுவரம்:

‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி, ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம், தங்கச்சி மடத்தில் நேற்று மீனவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்றனர். சவேரியார் ஆலயத்தில் இருந்து குழந்தை ஏசு ஆலயம் வரை நடை பெற்ற இந்த ஊர்வலத்தில் மீனவப்பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

பங்குத்தந்தை அருள் சந்தியா, மீனவ சங்கத் தலைவர்கள் சேசு, மெரிட், சகாயம், எடிசன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News