செய்திகள்
நீதிபதி ராஜேஸ்வரன்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் இன்று டிஸ்சார்ஜ்

Published On 2017-11-30 09:17 GMT   |   Update On 2017-11-30 09:17 GMT
உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன் இன்று மதியம் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
கோவை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமி‌ஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி நீதிபதி ராஜேஸ்வரன் கடந்த ஆகஸ்டு மாதம் 3 நாட்கள் கோவையில் விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை சென்றார். நேற்று முன்தினம் அவர் 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். இதற்காக 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் முதல் நாள் விசாரணையை முடித்த நீதிபதி ராஜேஸ்வரன் கோவை லட்சுமி மில் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி ராஜேஸ்வரன் இன்று மதியம் டிஸ்சார்ஜ் ஆகிறார். பிற்பகல் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.



Tags:    

Similar News