செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர்- ராஜேஷ் லக்கானி

Published On 2017-11-25 01:34 GMT   |   Update On 2017-11-25 01:34 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிமாநில அதிகாரி இருந்து வாக்குப்பதிவை கண்காணிப்பார். சி.ஆர்.பி.எப். படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.

கடந்த இடைத்தேர்தலின்போது வரவழைக்கப்பட்ட அளவில் சிறப்பு பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.

ஆர்.கே.நகரில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை 61 குழுக்கள் நியமிக்கப்பட்டு இருந்தது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய உத்தியை தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News