செய்திகள்

அரசின் நடவடிக்கைக்கு பயந்து டெங்கு, வெள்ளம் ஓடிப் போய்விட்டது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2017-11-11 08:34 GMT   |   Update On 2017-11-11 08:34 GMT
தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து டெங்கு மற்றும் வெள்ளம் ஓடிப்போய்விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை:

மதுரையில் தேசிய அக்மார்க் உணவுப்பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடுகு, மஞ்சள், தேன், டீத்தூள், நெய் உள்ளிட்ட பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை கண்டுபிடிக்க இந்த கண்காட்சி உதவியாக இருக்கும். தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். கலப்படம் செய்யப்படும் பொருட்களின் தொழிற்சாலைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பயந்து டெங்கு காய்ச்சல் மற்றும் வெள்ளம் ஓடிப் போய்விட்டது. முன்பெல்லாம் 2 அல்லது 3 காய்ச்சல்தான் இருக்கும். இப்போது 29 காய்ச்சல் இருக்கிறது.



அரசாங்கத்தை விட தி.மு.க. சிறப்பாக செயல்படுதாக மு.க.ஸ்டாலின் கூறுவது ஜோக். அரசு தூர் வாரியதால் தான் 2000 நீர்நிலைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News