செய்திகள்

பண மதிப்பிழப்பு ஒரு ஆண்டு நிறைவு: புதுவையில் நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் நாராயணசாமி பங்கேற்பு

Published On 2017-11-08 04:23 GMT   |   Update On 2017-11-08 04:44 GMT
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த கண்டன ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.
புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் இன்று  போராட்டம் நடத்தப்படுகிறது.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடந்தது. சுதேசி மில் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்றோர் மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது.



அங்கு பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டு வந்தபோது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் மாற்ற நின்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News