செய்திகள்

ஜெயலலிதாவை விட முதல்வர் பழனிச்சாமியை எளிதாக அணுக முடிகிறது: அமைச்சர் மணிகண்டன்

Published On 2017-10-23 04:08 GMT   |   Update On 2017-10-23 04:08 GMT
ஜெயலலிதாவை விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எளிதாக அணுக முடிகிறது என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் அரண்மனை முன்பு நடந்தது. இதில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்று பேசியதாவது:-



ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் மீது ஆணையிட்டு கட்சி கட்டுப்பாட்டிற்கும், ஆட்சிக்கும் ஒருபோதும் குந்தகம் விளைவிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.

அதன்படி இந்த அரசுக்கு விசுவாசத்துடனும், மக்களுக்காகவும் பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் துண்டுச் சீட்டு எழுதிக்கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் எப்போது அழைக்கிறார்களோ? அப்போது சென்று தான் ஜெயலலிதாவை பார்க்க முடியும்.



ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எப்போது நினைத்தாலும் உடனே சென்று பார்த்து விடலாம். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள குறைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News