செய்திகள்
விழாவுக்கான பூமி பூஜை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

தேனியில் 5-ந்தேதி நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இடத்தில் துணை முதல்வர் ஆய்வு

Published On 2017-10-19 08:57 GMT   |   Update On 2017-10-19 08:58 GMT
தேனி அருகே 5-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இடத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார்.
தேனி :



மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் அரசு சார்பில் மாவட்டம் தோறும் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. அதன்படி தேனியில் வருகிற 5-ந் தேதி விழா நடக்கிறது. இதற்காக தேனி அருகே போடி விலக்கு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தினை சமதளபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதோடு அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் விழா நடைபெறும் இடத்தினை நேரில் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தேனி மாவட்டத்தில் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது புகழை சேர்க்கும் வகையில் நடைபெற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பார்கள் என்றார்.
Tags:    

Similar News