செய்திகள்

பேரறிவாளனை வெளியாட்கள் சந்திக்க தடை

Published On 2017-09-25 10:15 GMT   |   Update On 2017-09-25 10:15 GMT
பரோலில் வெளி வந்த நாளில் இருந்து இன்று வரை 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர். பேரறிவாளனை வெளியாட்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலூர் ஜெயிலில் இருந்து கடந்த மாதம் 24-ந் தேதி இரவு ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்தனர்.

பரோலில் வெளி வந்த நாளில் இருந்து இன்று வரை 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர்.

இதற்கிடையே, மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரோல் நீட்டிக்கப்பட்ட மனு வேலூர் சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளனை ரத்த சொந்தங்கள் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அவர்களும் பேரறிவாளன் வீட்டில் தங்க கூடாது.

அதன்படி பேரறிவாளனை மற்றவர்கள் சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News