செய்திகள்

சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு லாரியில் கொண்டு சென்ற ராட்சத உருளை

Published On 2017-09-24 02:35 GMT   |   Update On 2017-09-24 02:35 GMT
சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு லாரியில் ராட்சத உருளை எடுத்துச் செல்லப்பட்டது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றபோது பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
மீஞ்சூர்:

தமிழக எல்லைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. ராக்கெட் ஏவுதளத்தின் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக சுமார் 10 மீட்டர் அகலமுள்ள ராட்சத உருளை சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பிரமாண்டமான லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை மேலூர் கிராமம் வழியாக இரவு 10 மணிக்கு அந்த பிரமாண்ட லாரி சென்றபோது மின் கம்பங்களில் உரசிவிடலாம் என்பதால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று மாலையில் தான் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

லாரி அந்த சாலையில் தொடர்ந்து செல்லமுடியாமல் நேற்று காலை மீஞ்சூர் புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. ராட்சத உருளையுடன் பிரமாண்ட லாரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
Tags:    

Similar News