செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

Published On 2017-09-11 07:53 GMT   |   Update On 2017-09-11 07:53 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,992-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 48 ஆக இருந்தது.

பின்னர் விலை உயர்ந்து 8-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 216-க்கு விற்றது. அதை தொடர்ந்து ரூ.56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 160 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.168 குறைந்துள்ளது.

ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 992 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,874-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44-க்கு விற்கப்படுகிறது.
Tags:    

Similar News