செய்திகள்

ரூ.5 ஆயிரத்தில் பறக்கலாம்: திருச்சி-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை

Published On 2017-08-01 10:20 GMT   |   Update On 2017-08-01 10:20 GMT
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஒரு வழிப்பயண கட்டண சலுகையாக ரூ.5 ஆயிரத்து 599 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் திருச்சி - சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த டைகர் ஏர்வேஸ் விமானம், ஸ்கூட் விமான நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதல் சேவை தொடங்கப்பட உள்ளது.

இது பற்றி ஸ்கூட் விமான நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி பரத் மகாதேவன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டைகர் ஏர்வேஸ் விமானங்கள் இனி ஸ்கூட் விமான நிறுவனம் என்ற பெயரில் இயக்கப்படும். இந்த நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்கனவே தினமும் 2 விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் விரைவில் மூன்றாவது விமான சேவையை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

எங்கள் நிறுவனம் சென்னை, திருச்சி, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஒரு வழிப்பயண கட்டண சலுகையாக ரூ.5 ஆயிரத்து 599 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 6-ந்தேதி வரை இந்த கட்டண சலுகைக்கு முன்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News