செய்திகள்

பழனி அருகே போலி டாக்டர்கள் 4 பேர் கைது

Published On 2017-07-27 11:18 GMT   |   Update On 2017-07-27 11:18 GMT
பழனி அருகே போலி டாக்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

பழனி:

பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் பழனி சப்-கலெக்டர் வினித், தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் நேற்று பழனி, ஆயக்குடி, கோதை மங்கலம், அ.கலையம்புத்தூர், பாப்பம்பட்டி, மானூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை திடீர் ஆய்வு செய்தனர். புது ஆயக்குடியில் வீட்டில் மருத்துவமனை நடத்தி வந்த அன்னமேரி (வயது 58) என்பவர் நர்சாக பணியாற்றி பின்னர் ஆஸ்பத்திரியே நடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். வீட்டில் இருந்த ஏராளமான மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பாப்பம் பட்டியைச் சேர்ந்த ராஜந்திரன், மானூரைச் சேர்ந்த பாலு, சந்தோஷ், அ.கலையம்புத்தூரைச சேர்ந்த பிரபு, கோதை மங்கலத்தைச் சேர்ந்த துரைராஜ் ஆகியோரும் போலி டாக்டர்களாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தது தெரிய வரவே அந்த ஆஸ்பத்திரிகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

இதில் ராஜேந்திரன், சந்தோஷ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். மற்றும் 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 4 பேர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News