செய்திகள்

கோவையில் செய்யது பீடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Published On 2017-06-28 07:40 GMT   |   Update On 2017-06-28 07:41 GMT
செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் அருகே சுப்பிரமணிய சாலையில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 4 அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். உள்ளே சென்றதும் நிறுவனத்தின் கதவை பூட்டிய அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News