செய்திகள்

ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை?: அதிகாரிகள் சோதனை

Published On 2017-06-16 04:43 GMT   |   Update On 2017-06-16 04:43 GMT
பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில் அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தினர்.
ராஜபாளையம்:

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கு பின்னர் பிளாஸ்டிக் அரிசி தமிழகத்தில் இல்லை என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் உள்ள கடையில் பெண் ஒருவர் முட்டை வாங்கினார்.

வீட்டிற்கு சென்று அந்த முட்டையை ஆம்லேட் போட முயன்றபோது முட்டை உடையவில்லை. இதையடுத்து அந்த பெண் முட்டையை அவித்தார்.

பின்னர் முட்டை ஓட்டை உடைத்தபோது அதற்குரிய வாசம் ஏதும் இல்லை. மேலும் வெள்ளை கரு சாம்பல் நிறத்தில் இருந்தது. மஞ்சள் கருவும் நிறமாறி இருந்தது.

வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் அது பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

Tags:    

Similar News