செய்திகள்

சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்: நாராயணசாமி தகவல்

Published On 2017-05-30 04:17 GMT   |   Update On 2017-05-30 04:17 GMT
சென்னையில் இருந்து கடலூருக்கு ரெயில்பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரெயில்பாதை அமைக்க மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நில ஆர்ஜிதம் செய்யுமாறு தமிழக அரசை ரெயில்வே துறையும் கேட்டுக் கொண்டது.

இந்த திட்டம் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் ஆகும். இதுதொடர்பாக புதுவை அரசிடம் ஒப்புதல் கேட்டபோது புதுவை-கடலூர் இடையே 3 கிலோ மீட்டருக்கு ஒரு ரெயில் நிலையம் அமைக்க கேட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி கடந்த 12-12-2016 அன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்.

அதன் அடிப்படையில் இதற்கு மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதம் புதுவை அரசுக்கு வந்துள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடக்க உள்ளது.

இதற்காக நிதியும் ஒதுக்கி உள்ளனர். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News