செய்திகள்

திருப்பூரில் இன்று கலெக்டருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Published On 2017-05-26 11:51 GMT   |   Update On 2017-05-26 15:52 GMT
திருப்பூரில் இன்று கலெக்டருக்கு எதிராக விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதம் ஒரு நாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறை மற்றும் கோரிக்கை மனுவுடன் இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

வெகுநேரமாகியும் கலெக்டரோ அல்லது உயர் அதிகாரிளோ கூட்டத்திற்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இன்று கலெக்டர் வரமாட்டார். அவர் அமைச்சருடன் ஆய்வுக்கு சென்று விட்டார் என்ற தகவல் கிடைத்தது.

இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, இந்த கலெக்டர் இருக்கும்வரை அடுத்த கூட்டம் நடக்ககூடாது என்று கூறிச்சென்றனர்.

இதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News