செய்திகள்
ஸ்மித், விராட் கோலி, வார்னே

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா? விராட் கோலியா?: தேர்வு செய்வது கடினம்தான் என்கிறார் வார்னே

Published On 2019-09-06 13:50 GMT   |   Update On 2019-09-06 13:50 GMT
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா? ஸ்மித்தா? என்பதை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று வார்னே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நான்கு இன்னிங்சில் இரண்டு சதம், ஒரு இரட்டை சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். இதன்மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 64-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். இதனால் தற்போதைய காலக்கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் மேலோங்கியுள்ளது. இதில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில்தான் போட்டி.

இந்நிலையில் யார் சிறந்த வீரர் என்பது குறித்து வார்னே கூறுகையில் ‘‘இதுவரை நடந்து முடிந்துள்ள டெஸ்ட் போட்டிகளை வைத்து பார்க்கும்போது விராட் கோலி, ஸ்மித் ஆகியோரின் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவது மிகவும் கடினம்.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது ஸ்மித்தாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், விராட் கோலியை நான் இழந்தால், நான் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். ஏனென்றால், அவர் ஒரு லிஜெண்ட்.



விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது விராட் கோலியாகத்தான் இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்த வரைக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால் தற்போமு நாம் பார்த்த வரைக்கும் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறந்த வீரர். என்னைப் பொறுத்த வரைக்கும் விராட் கோலி ரிச்சர்ட்சனை பின்னுக்குத் தள்ளிவிட்டார்’’ என்றார்.
Tags:    

Similar News