செய்திகள்
ரகானே

ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த 10-வது சதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது: ரகானே

Published On 2019-08-30 10:49 GMT   |   Update On 2019-08-30 10:49 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ரகானே 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார். இது அவரின் 10-வது சதமாகும். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த அவர், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம் எனக்கு முக்கியத்தும் வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த என்னுடைய 10-வது சதம் சிறப்பு வாய்ந்தது என்று நினைக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட சைகையுடன் இந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. சந்தோசத்தை வெளிப்படுத்துவது தானகவே வரும். அப்போது சற்று எமோசனல் இருந்தது.



10-வது சதத்தை அடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் முன் தயாராகுவது மிகமிக முக்கியமானது. கடந்த இரண்டு வருடம் இதைத்தான் செய்து வந்தேன். ஆகவே, 10-வது சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
Tags:    

Similar News