செய்திகள்
விக்கெட் வீத்திய மகிழ்ச்சியில் இந்திய அணி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்

Published On 2019-08-24 17:59 GMT   |   Update On 2019-08-24 17:59 GMT
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்துள்ளது.
ஆன்டிகுவா:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் அனைவரும் கை கொடுக்காத நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களை எட்டியது.

இந்திய  அணியில் அதிகபட்சமாக  ரஹானே 81 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 58 ரன்களும், ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்களும்,  ஜாசன் ஹோல்டர் 39 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 
Tags:    

Similar News