இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா விலகி இருப்பது விராட்கோலிக்கும், அவருக்கும் இடையே விரிசல் அதிகரித்து இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (சமூக வலைதளம்) பின்தொடரும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா திடீரென விலகி (அன்-பாலோ) இருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த செயல் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கும், அவருக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.