என் மலர்
நீங்கள் தேடியது "Anushka Sharma"
- ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
- ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரராக விராட் கோலி திகழ்கிறார்.
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
அடுத்தடுத்து சதம் அடித்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் என்றே சொல்லலாம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை இதன் மூலம் விராட் கோலி முறியடித்தார்.
இந்நிலையில் இந்த போட்டியை விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா நேரில் கண்டு களித்தார். அப்போது சதம் அடித்த விராட் கோலிக்கு, அனுஷ்கா சர்மா பிளைங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
- மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.
ஐதராபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸனின் அதிரடியான சதம் காரணமாக 186 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் சதம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என்று விராட் கோலி கூறுவார்.
அந்த வகையில் மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
- பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா.
- இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் ஆவார்.
இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், "பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.

பைக்கில் பயணம் செய்த அமிதாப் பச்சன்
இந்த பதிவை வைரலாக்கிய நெட்டிசன்கள் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.

பைக்கில் பயணம் செய்த அனுஷ்கா ஷர்மா
இந்நிலையில், அமிதாப் பச்சனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, "அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். போட்டி இல்லாத நேரங்களில் மனைவியுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது, ரெஸ்டாரண்டிற்கு செல்வது, கடகறைக்கு செல்வது என்று மனைவிக்கு என்று நேரம் செலவிட்டு வருவார்.
இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு விராட் கோலி டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தடித்த, மெல்லிய மற்றும் உங்கள் அழகான பைத்தியக்காரத்தனத்தின் மூலம் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய எல்லாமுமான உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது கோலியின் கால் சுளுக்கியது போல ஓடினார். அதனை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.
ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.

இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
Virat Kohli and Anushka Sharma at Mahakal temple, Ujjain?pic.twitter.com/3GUMc0EXDd
— Mufaddal Vohra (@mufaddel_vohra) March 4, 2023
நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
Virat Kohli and Anushka Sharma at the Mahakaleshwar Jyotirlinga Temple in Ujjain.@AnushkaSharma and @imVkohli
— Rahul Sisodia (@Sisodia19Rahul) March 4, 2023
says we came here to offer prayers and had a good 'darshan' at Mahakaleshwar temple.#ViratKohli #AnushkaSharma pic.twitter.com/OuvQLPEX6X
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
- விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
- அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
தம்பதிகள் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டனர்.

விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் பங்கேற்று பின்னர் பண்டாரா (மத விருந்து) ஏற்பாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் விருந்தாவனத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆசி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி சில நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 என்று பிரபலமாக அறியப்படும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிப்பதில் இன்றியமையாததாக இருக்கும்.
தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 17-ம் தேதி மும்பையிலும் தொடங்குகிறது.
- தனது அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
- தற்போது பூமா இந்தியா நிறுவனத்துடன் அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பூமா இந்தியா நிறுவனம் பதிவு
இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அனுஷ்கா சர்மா பதிவு
தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது பூமா நிறுவனத்துடன் நடிகை அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
- நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பூமா நிறுவனம் பதிவு
இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அனுஷ்கா சர்மா பதிவு
தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு கண்டன குரல் எழுப்பியுள்ளார்.
- கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறையை சிலர் படம் பிடித்து வீடியோ வெளியிட்டனர்.
- இதனை கண்டிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார். மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா பதிவு
விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்.