செய்திகள்
டிஆர்எஸ்

ரஞ்சி டிராபி நாக்அவுட் போட்டிகளில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி

Published On 2019-07-18 11:39 GMT   |   Update On 2019-07-18 11:39 GMT
இந்தியாவின் முன்னணி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் டிஆர்எஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் டிஆர்எஸ் (Umpire Decision Review System) தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்கும்போது, அதில் சந்தேகம் இருந்தால் பேட்ஸ்மேன் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தலாம். அந்த தொழில் நுட்பம் மூலம் பந்து பேட்டில் பட்டதா?, பந்தை பேடில் பட்டபிறகு ஸ்டம்பை எந்த கோணத்தில் தாக்கும்? என்பதை கண்டறியலாம்.

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலத்திற்கு பின் டிஆர்எஸ்-ஐ ஏற்றுக் கொண்டது. எம்எஸ் டோனி கேப்டனாக இருக்கும் வரை இந்தியா டிஆர்எஸ் முறையை பயன்படுத்தவில்லை. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்தியா டிஆர்எஸ் முறையை பயன்படுத்த ஒப்புக் கொண்டது.

இந்நிலையில ரஞ்சி டிராபி தொடரின் நாக்அவுட் சுற்று போட்டிகளில் பயன்படுத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரஞ்சி டிராபியில் நடுவர்கள் மோசமான வகையில் தீர்ப்பு வழங்குவதாக வந்த கோரிக்கையின் அடிப்படையில் அமல்படுத்தப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News