செய்திகள்

பாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா

Published On 2019-06-18 09:14 GMT   |   Update On 2019-06-18 09:14 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதி தோல்வி அடைந்தது. இது குறித்து பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்த கருத்துக்கு சானியா மிர்சா பதிலடி கொடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது.

இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது.



இது குறித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருந்துகிறேன். உங்கள் குழந்தையை ஷிசா பேலஸ் போன்ற துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் சென்று இருக்கிறீர்களே.

எனக்கு தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பது தீங்கானது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.



இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் என் குழந்தையை துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் செல்லவில்லை. இவ்வாறு அழைத்துச் செல்வது உங்களுக்கு தெரிந்த, உலகில் உள்ள மற்றவர்களின் பணியாகத்தான் இருக்கும்.

மற்றவர்களை காட்டிலும் என் மகனை நான் கவனமாக பராமரித்து வருகிறேன். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியன் அல்ல. அவர்களுக்கு நான் தாயோ, ஆசிரியரோ அல்ல என்பதை உணருங்கள்.

அவர்கள் எப்போது விழிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறைக்கு நன்றி’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News