செய்திகள்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் சாதனையை முறியடித்தார் மிட்செல் ஸ்டார்க்

Published On 2019-06-07 10:26 GMT   |   Update On 2019-06-07 10:26 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர் வீசி 46 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் ஒரு நாள் போட்டியில் 150 விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடத்தை பிடித்தார்.

அவர் 77 போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் 78 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதை மிட்செல் ஸ்டார்க் முறியடித்தார்.



நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் மிட்செல் ஸ்டார்க் ஆவார்.
Tags:    

Similar News