செய்திகள்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ராவல், டாம் லாதம் சதத்தால் நியூசிலாந்து 451/4

Published On 2019-03-01 08:04 GMT   |   Update On 2019-03-01 08:04 GMT
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் ராவல் மற்றும் லாம் லாதம் சதத்தால் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை அமைத்துள்ளது. #NZvBAN
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 234 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 86 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர்கள் ஜீத் ராவல், டாம் லாதம் இருவரும் சதம் அடித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 254 ரன் (69.5 ஓவர்) சேர்த்தனர்.

ஜீத் ராவல் 132 ரன்னிலும், டாம் லாதம் 161 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த டெய்லர் 4 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் - நிகோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.

இருவரும் வங்காளதேச பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். அவர்கள் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிக்கோல்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.



5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் வாக்னர் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 118 ஓவரில் 451 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

கேன் வில்லியம்சன் 93 ரன்னுடனும், வாக்னர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து 217 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து விரைவாக ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News