செய்திகள்

மேக்ஸ்வெல் ஆசை தற்போதைக்கு நிறைவேறாது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சொல்கிறார்

Published On 2019-02-28 14:24 GMT   |   Update On 2019-02-28 14:24 GMT
ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று மேக்ஸ்வெல் கூறுவது தற்போது நிறைவேறாது என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்த அவர், 2-வது போட்டியில் சதம் அடித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் நான்காவது இடத்தில் களம் இறங்கிய அவர், ஒருநாள் போட்டியில் 7-வது இடத்திற்குப் பிறகு களம் இறங்கி விளையாடுகிறார். டி20 கிரிக்கெட் போட்டியை போல் ஒருநாள் போட்டியிலும் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாட விரும்புகிறேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தட்டும். அதன்பின் பார்க்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அணிக்கு எது சிறந்ததோ, அதை நாங்கள் செய்வோம். தற்போதுள்ள நிலை தொடர்ந்து எப்படி செல்கிறா? என்று பார்க்க வேண்டும்.

நாங்கள் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம். அவரால் அதை செய்ய முடியும் என்பதை அவர் முதலில் சொல்ல வேண்டும். அந்த விஷயத்தை அவர் செய்தால், தானாகவே சிறந்த வீரராக உயர்வார். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரராகி இன்னும் அதிகமான வெற்றிகளை தேடித்தர வேண்டும் என்று அவரும் விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம். அப்படி அவர் செய்தால் சிறந்த வீரராக அங்கீகரிக்கப்படுவார்’’ என்றார்.
Tags:    

Similar News