செய்திகள்

ஐசிசி தரவரிசை - மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடம்

Published On 2019-02-02 12:36 GMT   |   Update On 2019-02-02 12:36 GMT
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். #SmritiMandhana
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ஸ்மிரிதி மந்தனா 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இரு சதமும், 8 அரைசதமும் அடங்கும்.



ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடமும், மேக் லேனிங் 3ம் இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4ம் இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.

பவுலிங்கில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 4வது இடத்திலும், பூனம் யாதவ் 8வது இடத்திலும், தீப்தி ஷர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர். #SmritiMandhana
Tags:    

Similar News