செய்திகள்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை- அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது

Published On 2018-11-22 08:09 GMT   |   Update On 2018-11-22 08:09 GMT
மகளிர் 20 ஓவர் உலககோப்பை அரையிறுதியில் தகுதி பெற்ற இந்தியா - இங்கிலாந்து, வெ.இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதுகின்றனர். #WomensT20WorldCup
6-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

மகளிர் உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தான் மோதிய 4 ‘லீக்‘ ஆட்டங்களிலும் வென்று இருந்தது. இதனால் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. #WomensT20WorldCup
Tags:    

Similar News