செய்திகள்

ராஜ்கோட் டெஸ்ட் - இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2018-10-06 09:41 GMT   |   Update On 2018-10-06 09:41 GMT
ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100) ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது. சேஸ் 53 ரன்களும், கீமோ பால் 47 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



181 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாலோ-ஆன் ஆகி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் தொடக்க வீரரான பொவேல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



பொவேல் 93 பந்தில் 83 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்களும், ஜடேஜா மூன்று விக்கெட்டும், அஸ்வின் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News