செய்திகள்

நேர்மறையான சிந்தனையோடு களம் இறங்க வேண்டும்- பாகிஸ்தான் வீரர்களுக்கு அஜ்மல் அறிவுரை

Published On 2018-09-23 09:05 GMT   |   Update On 2018-09-23 09:05 GMT
இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சயீத் அஜ்மல் வலியுறுத்தியுள்ளார். #AsiaCup2018
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் லீக் தொடரில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எந்தவித போட்டியின்றி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்னில் சுருண்டது. பின்னர் சேஸிங் செய்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் நேர்மறையான சிந்தனையோடு விளயைாட வேண்டும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சயீத் அஜ்மல் கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரு தகவல் சொல்லிக்கொள்கிறேன். அது என்வென்றால், வீரர்கள் அனைவரும் நேர்மறையான எண்ணத்தோடு விளையாட வேண்டும் என்பதைத்தான்.



அவர்கள் மிகவும் முன்னோக்கி யோசிக்கக் கூடாது. இரண்டு தரமான பந்து வீச்சாளர்களை பொற்றிருக்கும்போது, நேர்மறையான சிந்தனையோடு, சரியாக அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும்.

விராட் கோலி இல்லாத நிலையிலும் ஒன்சைடு மேட்ச் ஆக சென்றபோது ஏற்றுக் கொள்ள முடியாதது. இழுபறியான போட்டியாக இருந்தால், தோல்வியடைந்தால் கூட அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம்’’ என்றார்.
Tags:    

Similar News