செய்திகள்

காயத்தால் சுருண்ட ஹர்திக் பாண்டியா- ஸ்ட்ரெட்சரில் தூக்கிச் செல்லப்பட்டார்

Published On 2018-09-19 14:08 GMT   |   Update On 2018-09-19 14:08 GMT
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயத்தால் சுருண்டு விழ, ஸ்ட்ரெட்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். #INDvPAK #AsiaCup2018
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார். 18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரின் ஐந்தாவது பந்தை வீசிய போது பாண்டியாவில் முதுகுப் பகுதியில் வலி (lower back injury) ஏற்பட அப்படியோ மைதானத்தில் சுருண்டார்.



அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் எழுந்து நடந்துள்ளார். அவரது காயம் குறித்து மெடிக்கல் குழு மதிப்பிட்டு வருகிறது.
Tags:    

Similar News