செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் - ஹாங்காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2018-09-16 18:22 GMT   |   Update On 2018-09-16 18:22 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங்கை தேர்வ்ய் செய்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சினால் ஹாங்காங் அணி சிக்கியது.

இதனால்  ஹாங்காங் அணியினர் 35.1 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஐஜாஸ் கான் 27 ரன்னும், கின்சிட் ஷா 26 ரன்னும் எடுத்தனர்.



பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பகர் சமான் 24 ரன்னிலும், பாபர் அசம் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
Tags:    

Similar News