செய்திகள்

சேர்மன் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சோயிப் அக்தர்

Published On 2018-09-06 14:09 GMT   |   Update On 2018-09-06 14:09 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனின் ஆலோசகர் பதவியை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ராஜினாமா செய்துள்ளார். #ShoibAkhtar
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக நஜம் சேதி இருந்தார். இவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரை சேர்மன் ஆலோசகராக நியமித்தார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பிரதமரானார்.

இம்ரான் கானுக்கும் நஜம் சேதிக்கும் ஏற்கனவே மோதல் இருந்ததால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தானை பொறுத்த வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து அதிகாரத்தையும் கொண்டவர் பிரதமர்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக மாணியை நியமித்தார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சி மன்றக்குழு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சோயிப் அக்தர் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்த அக்தர், ‘‘ஆட்சி மன்றக்குழு மாறிய பின், நெறிமுறைப்படி பதவியில் தொடர்வது தவறு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News