செய்திகள்

கேப்டன் பதவியில் விரைவாக 3000 ரன்கள்- ஏபிடி, எம்எஸ் டோனியை முந்தினார் விராட் கோலி

Published On 2018-07-17 15:47 GMT   |   Update On 2018-07-17 15:47 GMT
கேப்டனாக ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. #ViratKohli #ENGvIND @imVkohli
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.

3-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். கேப்டனாக விராட் கோலியின் 52-வது போட்டி இதுவாகும். இதில் 49 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார்.



விராட் கோலி 14 ரன் அடித்திருக்கும்போது கேப்டன் பதவியில் இருந்து விரைவாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் 60 இன்னிங்சில் இந்த சாதனையை செய்திருந்தார். தற்போது விராட் கோலி 11 இன்னிங்சில் மீதமுள்ள நிலையில் அசத்தியுள்ளார்.

எம்எஸ் டுானி 70 இன்னிங்சிலும், கங்குலி 74 இன்னிங்சிலும், கிரேம் ஸ்மித் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 83 இன்னி்ங்சிலும், ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் 84 இன்னிங்சிலும் 3000 ரன்களை கடந்துள்ளனர்.
Tags:    

Similar News