செய்திகள்

2-வது இன்னிங்சில் இந்தியா ஏ அபாரமான ஆட்டம்- பிரித்வி ஷா, சமர்த் சதம்

Published On 2018-07-07 10:51 GMT   |   Update On 2018-07-07 10:51 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் 2-வது இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. #INDA
இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ அணி 133 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அம்ப்ரிஸ் (128) சதத்தால் 383 ரன்கள் குவித்தது.

இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 250 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை அடையுமோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக பிரித்வி ஷா ஒருநாள் போட்டியில் விளையாடுவது போன்று ஆடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.3 ஓவரில் 181 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. மயாங்க் அகர்வால் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அடுத்து பிரித்வி ஷா உடன் ரவிக்குமார் சமர்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 169 பந்தில் 188 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 28 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.

மறுமுனையில் விளையாடிய ரவிக்குமார் சமர்த் 137 ரன்கள் விளாசினார். அதன்பின் வந்த கருண் நாயர் 93 ரன்கள் அடித்தார். இதனால் இந்தியா 107 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 570 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வரை 316 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News