செய்திகள்

உலக கோப்பை கால்பந்து - தென் அமெரிக்கா நாடுகள் வெளியேற்றம்

Published On 2018-07-07 09:02 GMT   |   Update On 2018-07-07 09:02 GMT
உலக கோப்பையை பொறுத்தவரை தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்த ஒரு அணியும் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்படுகிறது. #WorldCup2018


உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் உள்ள அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

ஆனால் இந்த உலக கோப்பையை பொறுத்தவரை தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்த ஒரு அணியும் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்படுகிறது.

2 முறை சாம்பியனான அர்ஜென்டினா 2-வது சுற்றில் வெளியேறியது. 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான உருகுவே கால் இறுதியில் தோற்றன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா 2-வது சுற்றிலும், கோஸ்டாரிகா, பெரு முதல் சுற்றிலும் வெளியேறி இருந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ்-பெல்ஜியம் ஒரு அரை இறுதியில் மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் மோதும் அணிகள் விவரம் இன்று தெரிய வரும். இன்று நடைபெறும் கால் இறுதியில் ஐரோப்பியாவில் உள்ள இங்கிலாந்து-சுவீடன், ரஷியா-குரோஷியா அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News