செய்திகள்

பயிற்சியின்போது நொண்டிய நெய்மர்- கவலையில் பிரேசில் அணி

Published On 2018-06-19 15:14 GMT   |   Update On 2018-06-19 15:14 GMT
பயிற்சியின்போது வலி தாங்க முடியாமல் நொண்டியதால் அடுத்த போட்டியில் நெய்மர் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Neymar
பிரேசில் கால்பந்து அணி கேப்டனான நெய்மர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மெர்சைலே அணிக்கெதிரான போட்டியின்போது நெய்மருக்கு வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.

காயம் வீரியமடைந்தால் நெய்மர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கால்பந்து களத்திற்கு திரும்பினார். குரோசியா, ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மோதினார்.



நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். சுவிட்சர்லாந்து வீரர்கள் நெய்மர் குறிபார்த்து தாக்கினார்கள். அடிக்கடி அவரை கீழே தள்ளி FOUL ஆனார்கள்.

இந்நிலையில் இன்று நெய்மர் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார். அணிகளுடன் ஒன்றாக பயிற்சி செய்யும்போது நெய்மர் எந்தவித வலியும் இல்லாமல் சகஜமாக விளையாடினார்.



அதன்பின் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். அப்போது வலது காலில் அவருக்கு அதிகமான வலி ஏற்பட்டது. இதனால் நெய்மர் நொண்டி அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனடியாக அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார்கள். ஆகவே, உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.
Tags:    

Similar News