செய்திகள்

தென்கொரியாவை 1-0 என வீழ்த்தி 60 வருட மோசமான சாதனையை தகர்த்தது ஸ்வீடன்

Published On 2018-06-18 14:39 GMT   |   Update On 2018-06-18 14:39 GMT
உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்வீடன் #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்கொரியா - ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த 1998-ம் ஆண்டிற்குப் பிறகு தென்கொரியா தொடக்க போட்டியில் தோல்வியை சந்தித்ததே கிடையாது. இந்த சாதனையை நீடிக்கும் நோக்கத்தோடு தென்கொரியா களம் இறங்கியது.

1958-ம் ஆண்டிற்குப் பிறகு ஸ்வீடன் அணி தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. இந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ஸ்வீடன் களம் இறங்கியது.



முதல்பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆனால், அதிக அளவில் தவறு செய்தனர். இந்த உலகக் கோப்பையில் இதுதான் அதிக தவறுகள் செய்த போட்டியாக அமைந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் அட்ரியாஸ் கிராங்க்விஸ்ட் கோல் அடித்தார். அதற்கு தென்கொரியாவில் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் 60 வருடத்திற்குப் பிறகு ஸ்வீடன் முதல் ஆட்டத்தில் வெற்றியை ருசித்துள்ளது.
Tags:    

Similar News