செய்திகள்

ஆசிய மார்சியல் ஆர்ட்ஸ் போட்டிக்கு கோவையை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் தகுதி

Published On 2018-05-27 17:34 GMT   |   Update On 2018-05-27 17:34 GMT
டெல்லியில் நடைபெற்ற தேசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். #NationalMartialArtsGames

புதுடெல்லி:

3-வது தேசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் கடந்த 25-27ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 

தமிழகம் சார்பில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டைகர் கான் கராத்தே மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். 



குமிட்டி பிரிவில் தக்‌ஷதா ராம்குமார், தர்ஷா ராம்குமார், அதிபிரபு நாகராஜன், சவ்ரவ் கண்ணன், சக்தீஸ்வரி ஸ்ரீனிவாசன், சவ்மியா சுந்தராஜ், நந்திதா செல்வராஜ், நிலேஷ் சுரேஷ் ஆகிய 8 பேரும், ஹிரித்திகைலாஷ் ரவிசந்திரன், கமலேஷ் விஜயகுமார் ஆகிய இருவரும் குமிட்டி மற்றும் கட்டா ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். 
இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் ஆசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  #NationalMartialArtsGames
Tags:    

Similar News