செய்திகள்

மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்

Published On 2018-04-22 15:12 GMT   |   Update On 2018-04-22 15:12 GMT
மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸில் ரபெல் நடால் 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். #Nadal
மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் மொனாகோவில் நடைபெற்றது. களிமண் தரையில் (Clay) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் உள்பட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரும், களிமண் தரையில் ஜாம்பவானும் ஆன நடால், ஜப்பானைச் சேர்ந்த கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். மான்டே கார்லோ மாஸ்டர் பட்டத்தை 11-வது முறையாக நடால் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக நடால் இத்துடன் 31 மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.



நடால் இதுவரை மொனாகோவில் 72 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் நான்கு முறை மட்டுமே தோல்வியை தழுவியுள்ளார்.
Tags:    

Similar News