செய்திகள்

வாட்சன் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை

Published On 2018-04-20 16:10 GMT   |   Update On 2018-04-20 16:10 GMT
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வாட்சன் அதிரடியாக சதமடிக்க ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கான சென்னை நிர்ணயித்துள்ளது. #IPL #CSKvRR
புனே:

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். போட்டியின் முதல் பந்தை நோ-பாலாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் அந்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகள் விரட்டினர். 5-வது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை திரிபாதி ஸ்லிப் திசையில் பிடிக்க தவறினார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் களமிறங்கிய தோனி 5, பில்லிங்ஸ் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக விளையாட சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. #CSKvRR #IPL #TamilNews
Tags:    

Similar News