search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெய்னா"

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) சுப்மன் கில் சதம் அடித்து உள்ளார்.
    • விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 126 ரன்னும் (12 பவுண்டரி, 7 சிக்சர்), ராகுல் திரிபாதி 22 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி, மிச்சேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 168 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் சிறந்த வெற்றி யாகும்.

    டேரியல் மிச்சேல் அதிபட்சமாக 25 பந்தில் 35 ரன் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஹர்த்திக் பாண்ட்யா 4 விக்கெட்டும், அர்தீப்சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன்னிலும், லக்னோவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது.

    ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

    சதம் அடித்ததன் மூலம் சுப்மன்கில் புதிய சாதனை புரிந்தார். 20 ஓவர் போட்டியில் இளம் வயதில் செஞ்சூரி அடித்து அவர் இந்த சாதனையை புரிந்தார். 23 வயது 146 நாட்களில் சுப்மன்கில் சாதனை புரிந்தார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா 23 வயது 156 நாட்களில் சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. அவரின் சாதனையை சுப்மன்கில் முறியடித்தார்.

    3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவர் சதம் அடித்து உள்ளார். இதன் மூலம் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் வரிசையில் சுப்மன்கில் இணைந்தார். மேலும் விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார். 

    இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆன ரிஷாப் பந்த், இர்பான் பதான், ரெய்னாவுடன் இணைந்துள்ளார். #ENGvIND #RishabhPant

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பாந்த் 5-வது விக்கெட் ஆக களமிறங்கினார். ரன் எடுப்பதை விட விக்கெட்டை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்ததால், அவர் மெதுவாகவே பந்துகளை சந்தித்தார். ரன்கள் எடுக்க முயற்சிக்கவில்லை.

    29 பந்துகள் சந்தித்த பாந்த் மொயின் அலி பந்தில் அவுட் ஆனார். 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆன பாந்த் இர்பான் பதான், ரெய்னா உடன் இணைந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பதான் 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரெய்னா 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். மேற்கண்ட இரு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    மேலும், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் பதான், ரெய்னா, பாந்த் ஆகிய மூவருமே இடக்கை பேட்ஸ்மேன்கள். மூவருமே சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×