செய்திகள்

கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஹசின் ஜகான்

Published On 2018-04-10 10:28 GMT   |   Update On 2018-04-10 11:31 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #mohammedshami #hasinjahan
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். கடந்த மாதம் ஹசின் ஜகான் முகமது சமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், முகமதுசமி, பாகிஸ்தானை சேர்ந்த அலி‌ஷபா என்ற பெண்ணிடம் பணம் வாங்கினார். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்துக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என புகார் அளித்தார்.



சமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல், கற்பழிப்பு, துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் சென்று ஹசின் முறையிட்டார். மேலும், ஐபிஎல் தொடரில் முகமது சமியை விளையாட அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சமிக்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் காயமடைந்த சமியை காண அவர் ஹசின் ஜகான் மருத்துவமனைக்கு பார்க்க சென்றார். ஆனால் அவரை காண சமி மறுத்து விட்டார்.

முகமது சமி தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஹசின் ஜகான் இன்று அலிப்பூர் நீதிமன்றத்தில் சமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல் போன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன. #mohammedshami #hasinjahan #tamilnews

Tags:    

Similar News