செய்திகள்

பந்து சேதப்படுத்தியதில் ஆஸி. பயிற்சியாளர் லிமேனை காப்பாற்றிய வார்த்தைகள்

Published On 2018-03-29 06:12 GMT   |   Update On 2018-03-29 06:12 GMT
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டாரன் லிமேன் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. #BallTampering #SAvAUS #DarrenLehmann
மெல்போர்ன்:

லிமேனுக்கு ஏன் இந்த வி‌ஷயம் தெரியாது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே அவர் பதவி பிழைத்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

12-வது வீரர் ஹேன்ட்ஸ் கம்பிடம் பயிற்சியாளர் லிமேன் கோபமாக ‘‘அங்கு (மைதானம்) என்ன நடந்து கொண்டு இருக்கிறது’’ என்று கண்டுபிடி என்று கூறினார். இந்த வார்த்தைகள் தான் அவரை காப்பாற்ற இருக்கிறது.

மேலும் ஆட்ட இடைவேளையின் போது லிமேன் வீரர்கள் அனைவரையும் தனது அறைக்கு அழைத்து என்ன நடக்கிறது என்று அனைவரிடமும் கேட்டுள்ளார். இதன் மூலம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



ஆனால் அணியின் ஒட்டுமொத்த நடத்தை குறித்தும், அதில் லிமேனின் பங்கு குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் உப்புதாள் பேப்பர் தாள் பயன்படுத்தப்பட்டது. மஞ்சள் நிற டேப் அல்ல என்பதும், பான்கிராப்டை இந்த பணியில் அமர்த்தியதோடு பந்தின் ஒரு பகுதியை எப்படி தேய்க்க வேண்டும் என்பதையும் வார்னரே பாடம் எடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. #BallTampering #SAvAUS #DarrenLehmann
Tags:    

Similar News