செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் முகமது ஷமி மனைவி சந்திப்பு - கணவர் மீது சரமாரி புகார்

Published On 2018-03-23 10:17 GMT   |   Update On 2018-03-23 10:17 GMT
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி இன்று சந்தித்து தன் கணவர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கினார்.
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது ‌ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார்.  ‌ஷமியும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், முகமது ‌ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜகான் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார்.



இது தொடர்பாக ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை முகமது ‌ஷமியின் மனைவி ஹசின் ஜகான் இன்று சந்தித்தார். அப்போது, தன் மீது முகமது ஷமி கூறிய குற்றச்சாட்டு குறித்தும், தனது நிலைப்பாடு பற்றியும் அவர் மம்தாவிடம் எடுத்துரைத்தார். மேலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News