செய்திகள்

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது - பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

Published On 2018-02-25 05:59 GMT   |   Update On 2018-02-25 06:11 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி.20 தொடரின் கடைசி போட்டியில் வென்றதற்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதே காரணம் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #SAvIND #TeamIndia #RohitSharma
கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் வெற்றிக்கு புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சே காரணமாக இருந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்கு 19 ரன் தேவைப்பட்டது. புதுமுக வீரர் கிறிஸ்டியன் ஜோனகர் அணியில் இருந்தார். அவர் அதிரடியான நிலையில் இருந்தார். இதே போல பெகருதீனும் மற்றொரு முனையில் இருந்தார்.

ஆனால் புவனேஷ்வர் குமார் கடைசி ஓவரில் மிகவும் சிறப்பாக வீசி 11 ரன்கள் கொடுத்தார். கடைசியில் ஜோனகரை அவுட் செய்தார்.



இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்து இருந்தது. டெஸ்ட் தொடரை மட்டும் இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது இருந்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

கேப்டன் பதவியில் பெற்ற வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த பெருமையாக கருகிறேன். நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக கருதுகிறேன்.

ஆனால் பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். முதல் 6 ஓவரில் எங்களது பவுலர்கள் சிறப்பாக வீசினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #SAvIND #INDvSA #TeamIndia #RohitSharma
Tags:    

Similar News