செய்திகள்

இன்றைய போட்டியில் 2 ஆயிரம் ரன்னைக் கடந்து கோலி சாதனைப் படைப்பாரா?

Published On 2018-02-18 08:23 GMT   |   Update On 2018-02-18 08:23 GMT
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்றைய போட்டியில் 46 ரன்கள் எடுத்து 2000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. #SAvIND #ViratKohli
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

3 டெஸ்டில் 286 ரன்னும் (6 இன்னிங்ஸ்), 6 ஒருநாள் போட்டியில் 558 ரன்னும் குவித்தார். தென்ஆப்பிரிக்கா பயணத்தில் இதுவரை அவர் 844 ரன்கள் (12 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். இன்னும் 156 ரன்கள் எடுத்தால் அவர் 1000 ரன்களை எடுப்பார். மூன்று 20 ஓவரில் அவர் இந்த ரன்னை எடுத்து 1000 ரன்னை கடந்து சாதனை படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



விராட் கோலி இன்னும் 44 ரன் எடுத்தால் 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். அவர் 55 ஆட்டத்தில் 1956 ரன் எடுத்துள்ளார். அதில் 18 அரை சதம் அடங்கும். சராசரி 52.86 ஆகும்.

இன்றைய ஆட்டத்தில் கோலி 2 ஆயிரம் ரன்னை எடுப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நியூசிலாந்தை சேர்ந்த கப்தில் (2188 ரன்), மெக்கல்லம் (2140) ஆகியோர் மட்டுமே இந்த ரன்னை எடுத்துள்ளனர். கோலி 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
Tags:    

Similar News