செய்திகள்

இந்திய இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது: பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தி

Published On 2018-02-06 06:31 GMT   |   Update On 2018-02-06 06:31 GMT
ஜூனியர் உலககோப்பையை வென்ற இந்திய இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
மும்பை:

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

இதன்மூலம் இந்திய அணி 4 முறை ஜூனியர் உலககோப்பையை வென்று முத்திரை பதித்தது.

உலககோப்பையை வென்ற பிரித்விஷா தலைமையிலான இந்திய அணி நேற்று மும்பை திரும்பியது. விமான நிலையத்தில் வீரர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜூனியர் உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும் அறிவிக்கப்பட்டது.



இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது என்றும், அனைவரும் ஒரே மாதிரியான பரிசு தொகையை அறிவித்து இருக்க வேண்டும் என்றும் டிராவிட் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு உதவியாக இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோரெபி உடல் இயக்க நிபுனர் மற்றும் மேலும் 2 பேருக்கு ரூ.20 லட்சம் அறிவித்துவிட்டு தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் வழங்குவது சரிதானா? என்றும் டிராவிட் கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News