செய்திகள்

ஜூனியர் இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர், சச்சின் வாழ்த்து

Published On 2018-02-03 10:10 GMT   |   Update On 2018-02-03 10:10 GMT
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றிய ஜூனியர் இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் சச்சின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #U19CWCFinal #U19WorldCup
நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 216 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்தியா 38.5 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 220 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா 102 பந்தில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.



ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றிய பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்துவருகின்றன.



நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #U19CWCFinal #U19WorldCup #INDvAUS #Dravid
Tags:    

Similar News